×

சில்லி பாயின்ட்...

* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியை தொடங்கியுள்ள இந்திய வில்வித்தை வீரர், வீராங்னைகள் முழு உடல்தகுதி பெற குறைந்தது 4 முதல் 6 வார காலமாகும் என்று தேசிய வில்வித்தை அணி பிசியோதெரபி நிபுணர் டாக்டர் அரவிந்த் யாதவ் கூறியுள்ளார்.
* கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சில் மற்றும் வியர்வையை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம். நீண்ட கால பழக்கத்தை திடீரென கைவிடுவது சற்று சிரமமாகவே இருக்கும். சிலர் மறதியாக மீண்டும் எச்சிலை தொட்டு தேய்க்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வேகப் பந்துவீச்சாளர்கள் இதில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வேகம் ஜாகீர் கான் வலியுறுத்தி உள்ளார்.

* அபுதாபியில் பயிற்சி மேற்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா, வலைப்பயிற்சியின்போது அடித்த ஒரு பந்து இமாலய சிக்சராக அமைந்ததுடன் ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது விழுந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
* கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சிஎஸ்கே வேகம் தீபக் சாஹர், சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்க உள்ளார். அதற்கு முன்பாக அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்பட உள்ளது.
* கிரிக்கெட்டில் நிறவெறி இருப்பது உண்மை தான். வீரர், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் என அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து முயற்சித்தால் மட்டுமே இதை களைய முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி வலியுறுத்தி உள்ளார்.

Tags : Arvind Yadav ,Zaheer Khan , Arvind Yadav, speed Zaheer Khan
× RELATED ரிவர்ஸ் ஸ்விங்கை ஜாகீர்...